பொது நலவாய மாநாட்டில் கலந்துகொள்ள உயர்மட்ட பிரதிநிதிகள் எதிர்வரும் 10 ஆம் திகதி நாட்டிற்கு வருகை

பொது நலவாய மாநாட்டில் கலந்துகொள்ள உயர்மட்ட பிரதிநிதிகள் எதிர்வரும் 10 ஆம் திகதி நாட்டிற்கு வருகை

பொது நலவாய மாநாட்டில் கலந்துகொள்ள உயர்மட்ட பிரதிநிதிகள் எதிர்வரும் 10 ஆம் திகதி நாட்டிற்கு வருகை

எழுத்தாளர் Staff Writer

04 Nov, 2013 | 2:36 pm

இலங்கையில் நடைபெறவுள்ள பொது நலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள வெளிவிவகார செயலாளர்கள் உள்ளிட்ட வெளிநாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் எதிர்வரும் 10 ஆம் திகதிமுதல் நாட்டிற்கு வருகைதரவுள்ளனர்.
எதிர்வரும் 11 ஆம் திகதிமுதல் வெளிவிவகார அமைச்சர்கள் நாட்டிற்கு வருகைதரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பொதுத் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ரொட்னி பெரேரா குறிப்பிட்டார்.
வெளிநாடுகளின் அரச தலைவர்கள் 14 ஆம் திகதிமுதல் இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக அவர் கூறினார்.
நாட்டிற்கு வருகைதரவுள்ள அரச தலைவர்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டது.
இதேவேளை, பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்காக இந்த வாரம் முழுவதும் ஒத்திகை நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்