பெயரளவில் பாரிய கட்சிகளாக இருந்து பயனில்லை – சுனில் ஹதுன்நெத்தி

பெயரளவில் பாரிய கட்சிகளாக இருந்து பயனில்லை – சுனில் ஹதுன்நெத்தி

பெயரளவில் பாரிய கட்சிகளாக இருந்து பயனில்லை – சுனில் ஹதுன்நெத்தி

எழுத்தாளர் Staff Writer

04 Nov, 2013 | 9:32 am


மக்கள் விடுதலை முன்னணியின் மக்கள் சந்திப்பு ஒன்று நேற்று மாஹரகமவில் நடைப்பெற்றது.
மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுன்நெத்தி தெரிவித்த கருத்து –
“இந்த நாட்டின் அரசியல் எவ்வித முன்னேற்றமும் இன்றி ஓரே இடத்தில் பழைமைவாய்ந்து காணப்படுகையில் புதிய அரசியல் பிரவேசம் ஒன்றை மக்கள் விடுதலை முன்னணியின் நாங்களே
அறிமுகப்படுத்தினோம். ஐக்கிய தேசிய கட்சிக்குள் காணப்படுகின்ற பிரச்சினைகளால், அந்த கட்சிக்கு மக்கள் இருந்தும் பயனில்லாமல் உள்ளது. மக்களின் இதயத்துடிப்பு விளங்காவிடின் அந்த தலைமைத்துவத்தை மக்கள் நிராகரித்து விடுவார்கள். அவ்வாறான கட்சிகள் பெயரளவில் பாரிய கட்சிகளாக இருந்தும் பயனில்லை. காலப்போக்கில் அந்த கட்சிகள் சிறியதாகிவிடும். மக்கள் விடுதலை முன்னணிக்கு என்ன நடந்துள்ளது என்று வினவினால் அவ்வாறு ஒன்றும் இல்லை. ஏனெனில் தேர்தல் முடிவுகள் எதுவாக அமைந்தாலும் மக்கள் விடுதலை முன்னணி அரசியல் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கும்”
எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் கொழும்பு மாவட்ட குழுத்தலைவராக கே.டி. லால்காந்த நியமிக்கப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.
மக்கள் விடுதலை முன்னணிஅரசியல் குழு உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்த கருத்து :-
“ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்கும் நல்லவர்கள் கிராமத்தில் இன்றும் உள்ளனர். நாட்டுக்கு அழிவு ஏற்பட்டுவிடும் என்று தேர்தலில் புள்ளடியிடாதவர்களும் உள்ளனர். அதேபோன்று வெற்றிலைக்கு வாக்களிக்கும் நல்லவர்களும் கிராமத்தில் உள்ளனர். நாடு சீரழிந்து விடும், கெசினோ வந்துவிடும் என்று எண்ணி இவர்கள் புள்ளடியிடவில்லை. ஆகவே, நாங்கள் சிறந்த மனிதர்களை ஒன்றுசேர்க்க ​வேண்டும், நாங்கள் கிராமத்தில் மக்கள் விடுதலை முன்னணினராக செயற்பட வேண்டியதில்லை. பொதுமக்களில் சாதாரண மனிதராக செயற்பட்டு எமது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக போராட வேண்டும்”


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்