பிரித்தானியாவிற்கு வருகைதருபவர்களுக்கான பிணைத் திட்டம் ரத்து

பிரித்தானியாவிற்கு வருகைதருபவர்களுக்கான பிணைத் திட்டம் ரத்து

பிரித்தானியாவிற்கு வருகைதருபவர்களுக்கான பிணைத் திட்டம் ரத்து

எழுத்தாளர் Staff Writer

04 Nov, 2013 | 3:58 pm

பிரித்தானியாவிற்கு வருகைதருவோருக்கான பாதுகாப்புப் பிணைத் தொகைத் திட்டத்தை அந்தநாட்டு அரசாங்கம் கைவிட்டுள்ளது.
தமது நாட்டிற்கு வருகைதந்த பின்னர் விசா விதிமுறைகளை மீறும்  அச்சுறுத்தலுள்ள வெளிநாட்டவர்களுக்கு 3000 பவுண் விசா பிணைத் திட்டத்தை கடந்த மே மாதம் உள்விவகார செயலாளர் திசேரா மே அறிவித்திருந்தார்.
இந்த பிணைத்திட்டம் இம்மாதம் அறிமுகப்படுத்தப்படவிருந்த போதிலும்,  தற்போது அது கைவிடப்பட்டுள்ளதாக பிரித்தானிய உள்விவகார அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த திட்டத்தை தடைசெய்யப் போவதாக பிரித்தானியாவின் பிரதிப் பிரதமர் நிக் க்ளேக் எச்சரித்ததை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான் பங்களாதேஷ் மற்றும் நைஜிரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களின் வருகையை குறைப்பதை இலக்காகக் கொண்டு இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்