பர்விஷ் முஷாரப்புக்கு நீதிமன்றம் பிணை

பர்விஷ் முஷாரப்புக்கு நீதிமன்றம் பிணை

பர்விஷ் முஷாரப்புக்கு நீதிமன்றம் பிணை

எழுத்தாளர் Staff Writer

04 Nov, 2013 | 7:38 pm

பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்விஷ் முஷாரப்புக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
2007 ஆம் ஆண்டு இடம்பெற்ற மதகுரு ஒருவருடைய கொலை தொடர்பான வழக்கு விசாரணைகளின்போதே நீதிமன்றம் இந்த பிணை உத்தரவை பிறப்பித்துள்ளது.
எனினும் முஷாரப்புக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் மூலம் முன்னாள் ஜனாதிபதியான முஷாரப் விடுதலை செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளது என அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் வீட்டுக்காவலில் இருந்தும் அவர் விடுதலை செய்யப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் படுகொலை குறித்து பர்விஸ் முஷாரப் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்