தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் மாணவர்கள் கவனயீர்ப்பு பேராட்டம்

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் மாணவர்கள் கவனயீர்ப்பு பேராட்டம்

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் மாணவர்கள் கவனயீர்ப்பு பேராட்டம்

எழுத்தாளர் Staff Writer

04 Nov, 2013 | 1:45 pm

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் மாணவர்கள் இன்று காலை கவனயீர்ப்பு பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமது புதிய பாடசாலையில் கற்பதற்கான வளங்கள் போதியளவில் காணப்படவில்லை என தெரிவித்து, மாணவர்கள் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.
இந்த முறைப்பாடுகள் தொடர்பில் நுவரெலியா கோட்டக் கல்வி பணிப்பாளர் எஸ்.சோமசுந்தரத்திடம் வினவியபோது, மேல் கொத்மலை திட்டத்தினூடாக இந்த பாடசாலைக்கான கட்டட திட்டடங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அவற்றினை உரிய காலத்தில் நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் இணைந்து காலை 8.30 அளவில் இந்த கவனயீர்ப்பு பேராட்டத்தை ஆரம்பித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு செல்லும் ஹட்டன் – நுவரெலியா பிரதான  வீதியில் இந்த பேராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்