ஜப்பான் திட்ட மதிப்பீட்டு உத்தியோகத்தர்கள் யாழ். விஜயம்

ஜப்பான் திட்ட மதிப்பீட்டு உத்தியோகத்தர்கள் யாழ். விஜயம்

ஜப்பான் திட்ட மதிப்பீட்டு உத்தியோகத்தர்கள் யாழ். விஜயம்

எழுத்தாளர் Staff Writer

04 Nov, 2013 | 7:06 pm

ஜப்பான் நிதியுதவியின் கீழ் யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக அந்த நாட்டின் திட்ட மதிப்பீட்டு உத்தியோகத்தர்கள் குழுவொன்று இன்று யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளது.
ஐவரடங்கிய இந்த குழு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தை இன்று முற்பகல் அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளது.
ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் குறைநிறைகள் தொடர்பாக இந்த குழுவினர் தம்மிடம் வினவியதாக அரசாங்க அதிபர் நியூஸ்பெஸ்டுக்கு தெரிவித்தார்.
ஜப்பானிய நிதியுதவியின் மூலம் யாழ் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகளின் மேம்பாடு குறித்து மதிப்பீடு செய்யும் நோக்கிலேயே இந்த விஜயம் அமைந்திருந்ததாக ஜப்பானின் திட்ட மதிப்பீட்டு உத்தியோகத்தர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.
எதிர்காலத்திலும் யாழ் மாவட்டத்தில் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கான பரிந்துரைகளை முன்மொழியவுள்ளதாகவும் ஜப்பானின் திட்ட மதிப்பீட்டு உத்தியோகத்தர்கள் மாவட்ட அரசாங்க அதிபரிடம் உறுதியளித்துள்ளனர்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்