சிகிரியாவை அண்மித்த பகுதிகளை அபிவிருத்தி செய்ய தீர்மானம்

சிகிரியாவை அண்மித்த பகுதிகளை அபிவிருத்தி செய்ய தீர்மானம்

சிகிரியாவை அண்மித்த பகுதிகளை அபிவிருத்தி செய்ய தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

04 Nov, 2013 | 10:33 am

சிகிரியாவை அண்மித்த பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் குறிப்பிடுகின்றது.
மத்திய கலாசார நிதியத்துடன் இணைந்து இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பணியகத்தின் பணிப்பாளர் அனில் பீரிஸ் தெரிவித்தார்.
இதற்கமைய, சிகிரியாவை அண்மித்த பகுதிகளை சுத்தப்படுத்தும் மற்றும் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பாதுகாப்பற்ற முறையில் காணப்படும் பாறைகள் தொடர்பில் கண்டறிதல், பெறுமதியான ஓவியங்களை பாதுகாத்தல் போன்ற செயற்பாடுகளும் இதனூடாக முன்னெடுக்கப்படவுள்ளதாக புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்