சாம்பியன் பட்டம் நொவெக் ஜோக்கோவிச் வசம்

சாம்பியன் பட்டம் நொவெக் ஜோக்கோவிச் வசம்

சாம்பியன் பட்டம் நொவெக் ஜோக்கோவிச் வசம்

எழுத்தாளர் Staff Writer

04 Nov, 2013 | 4:27 pm

பாரிஸ் மார்ஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை செர்பியாவின்  முன்னணி வீரர் நொவெக் ஜோக்கோவிச் கைப்பற்றியுள்ளார்.
இறுதிப் போட்டியில் ஸ்பெய்னின் டேவிட் பெரரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற நேர் செட் கணக்கில் நொவெக் ஜோக்கோவிச் வெற்றிகொண்டுள்ளார்.
போட்டியின் முதல் செட்டை 7 க்கு 5 எனக் கைப்பற்றிய நொவெக் ஜோக்கோவிச் இரண்டாவது செட்டையும் 7 க்கு 5 என இலகுவாக தன்வசப்படுத்தினார்.
கடந்த செம்டெம்பர் மாதம் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் ரபெயல் நடாலிடம் தோல்வி அடைந்த பின்னர், தாம் பங்குபற்றிய 17 போட்டிகளிலும் 26 வயதான நொவெக் ஜோக்கோவிச் வெற்றிபெற்றுள்ளார்
இதேவேளை, ATP World Tour Finals  டென்னிஸ் தொடரின் குழுநிலைப் போட்டியில் முன்னாள் சாம்பியன் நொவெக் ஜோக்கோவிச்,  ரொஜர் பெடரரை எதிர்கொள்ளவுள்ளார்.
லண்டனில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள இந்தப் போட்டியில் பி குழுவில் ஆஜென்ரினாவின் ஜூவன் மார்ட்டின் டெல் போற்றோ,  , ரிஸ்சட் கெஸ்கூவட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதேவேளை ஏ குழுவில் முதல் நிலை வீரர் ரபெயல் நடாலை, சக நாட்டு வீரரான டேவிட் பெரர் எதிர்கொள்ளவுள்ளார்.
தோமஸ் பேடிச், ஸ்டானிலாஸ் வவ்ரிங்கா ஆகியோரும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
ATP World Tour Finals டென்னிஸ் தொடரில் தரப்படுத்தலில்  முதல் எட்டு  இடங்களிலுள்ள வீரர்கள் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்