சவூதியில் தங்கியுள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு எதிராக நடவடிக்கை

சவூதியில் தங்கியுள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு எதிராக நடவடிக்கை

சவூதியில் தங்கியுள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு எதிராக நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

04 Nov, 2013 | 1:38 pm


பொது மன்னிப்பு காலம் நிறைவடைந்ததன் பின்னர் தமது நாட்டில் தங்கியுள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகளை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை சவூதி அரேபியா முன்னெடுத்துள்ளது.
இதன்கீழ், குற்றச்செயல்களுடன் தொடர்புடைய வெளிநாட்டவர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு அனுமதி வழங்கப்படாதென சவூதி உள்விவகார அமைச்சின் பேச்சாளரை மேற்கோள்காட்டி, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏனைய வெளிநாட்டவர்களின் கைவிரல் அடையாளத்தை பெற்றுக்கொண்டதன் பின்னர் அவர்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்படவுள்ளதுடன், மீண்டும் ஒருமுறை சவூதி அரேபியாவிற்கு தொழில் நிமிர்த்தம் வருகை தருவதற்கும் அனுமதி வழங்கப்படாதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய, வெளிநாட்டவர்கள் பணியாற்றும் வர்த்தக நிலையங்கள், நிர்மாணத் துறை மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட இடங்கள் தொழிற் பரிசோதகர்களால் சோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாகவும் சவூதி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் சவூதியில் இருந்து வெளியேறுவதற்கு வழங்கப்பட்டிருந்த காலஅவகாசம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்