சட்டவிரோத மின்சாரம்; 6 பேர் கைது

சட்டவிரோத மின்சாரம்; 6 பேர் கைது

சட்டவிரோத மின்சாரம்; 6 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

04 Nov, 2013 | 7:23 pm

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பகுதியில் சட்டவிரோதமாக மின்சார இணைப்பை பெற்றுக்கொள்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை மின்சார சபை உத்தியோகத்தர்களும், அக்கரைப்பற்று பொலிஸாரும் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பின்போது இன்று முற்பகல் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைதானவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, சந்தேகநபர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்