கொலன்னாவை உட்பட சில பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு

கொலன்னாவை உட்பட சில பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு

கொலன்னாவை உட்பட சில பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு

எழுத்தாளர் Staff Writer

04 Nov, 2013 | 6:45 pm

கொலன்னாவை உட்பட சில பகுதிகளில் நாளை 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
நாளை காலை 8 மணிமுதல் இரவு 8 மணிவரை 12 மணித்தியாலத்திற்கு நீர் விநியாகம் தடைப்படும் என தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபை குறிப்பிடுகின்றது.
இதன் பிரகாரம், கொலன்னாவை மாநாகர சபை பிரதேசம், சேதவத்தை, மாதின்னாகொட, வெல்லம்பிட்டிய, மொரகஸ்முல்ல, ராஜகிரிய மற்றும் நாவல போன்ற பகுதிகளுக்கான நீர்விநியோகம் தடைப்படவுள்ளது.
கொலன்னாவை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின்சார விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளமையே இதற்கு காரணமாக அமைந்துள்ளது என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்