ஐ.தே.க முன்வைத்த யோசனையை நடைமுறைப்படுத்துமாறு மகா சங்கத்தினர் வலியுறுத்தல்

ஐ.தே.க முன்வைத்த யோசனையை நடைமுறைப்படுத்துமாறு மகா சங்கத்தினர் வலியுறுத்தல்

ஐ.தே.க முன்வைத்த யோசனையை நடைமுறைப்படுத்துமாறு மகா சங்கத்தினர் வலியுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

04 Nov, 2013 | 1:27 pm

ஐக்கிய பிக்குகள் முன்னணி கரு ஜயசூரிய மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட யோசனைகளை நடைமுறைப்படுத்துமாறு மகா சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
இன்று மாலை கூடவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இதற்கான அங்கீகாரத்தினை பெறுமாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிக்குகள் முன்னணியின் யோசனையை செயன்முறை ரீதியில் நடைமுறைப்படுத்துவதில் நேரடியாக தாக்கம் செலுத்தக்கூடிய மூன்று விடயங்கள் தொடர்பில் ஐக்கிய பிக்குகள் முன்னணி, சஜீத் பிரேமதாச மற்றும் கரு ஜயசூரிய ஆகிய தரப்பினர் நேற்று ஏகமனதாக இணக்கம் தெரிவித்திருந்தனர்.
இதற்கமைய கட்சிக்கு தலைமைத்துவ சபையொன்று  உருவாக்கப்படுவதுடன், அதில் கரு ஜயசூரிய நியமிக்கப்படுவதுடன் அவர் சார்பாக மேலும் இருவர் பெயரிடப்பட வேண்டும்.
அத்துடன் சஜித் பிரேமதாசவும் அவர் சார்பாக மேலும் இருவரும் பெயரிடப்பட வேண்டும்.
இதனை தவிர தலைமைத்துவ சபைக்கு தாம் சார்பாக  மூன்று பே​ரை பெயரிட தற்போதைய தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு சந்தர்ப்பம் உரித்தாகின்றது.
இரண்டாம் இணக்கப்பாடாக கட்சி யாப்பில் திருத்தம் மேற்கொள்வதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சிய யாப்பில், தலைவர், ஆலோசனைக் குழு என்பவற்றிற்குப் பதிலாக ஐக்கிய தலைமைத்துவ சபை எனும் சொற்பதம் பிரயோகிக்கப்பட வேண்டும்.
அத்துடன் ஐக்கிய தலைமைத்துவ சபையின் தலைவர், செயற்குழுவின் தலைமைப் பொறுப்பை வகிக்கவேண்டும் என்ற யோசனைக்கும் ஐக்கிய பிக்குள் முன்னணி, கரு ஜயசூரிய மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் ஏகமனதாக இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இந்த யோசனைகள் இன்று மாலை கூடவுள்ள செயற்குழுவில் முன்வைக்கப்படவுள்ளன.
இந்த  யோசனைகளை நடைமுறைப்படுத்தி, கட்சியின் எதிர்காலம் குறித்து தீர்மானிப்பதா அல்லது சுமார் 20 வருடகாலமாக தோல்வியை சந்தித்துள்ள தலைமைத்துவத்தை தொடர்ந்தும் தக்கவைத்திருப்பதா என்பது இன்று மாலை கூடவுள்ள செயற்குழுவில் தீர்மானிக்கப்படவுள்ளது.
அத்துடன் மகா சங்கத்தினருக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதா? இல்லையா? என்பது இன்று மாலை தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்