ஐ.தே.க கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று

ஐ.தே.க கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று

ஐ.தே.க கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று

எழுத்தாளர் Staff Writer

04 Nov, 2013 | 7:50 pm

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம், கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் தற்போது நடைபெற்று வருகின்றது.
செயற்குழு கூட்டம் இன்று மாலை 4 மணியளவில் ஆரம்பமானதாக நியூஸ்பெஸ்டின் அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டார்.
எதிர்கட்சித் தலைவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாச, லக்ஷ்மன் கிரியெல்ல உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களும், செயற்குழு உறுப்பினர்களும் கட்சித் தலைமையத்திற்குள் பிரசன்னமாகியுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைமையகத்தினுள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்