இவ்வருடத்தில் ஒரு மில்லியன் மரக்கன்றுகளை நாட்டுவதற்கு நடவடிக்கை

இவ்வருடத்தில் ஒரு மில்லியன் மரக்கன்றுகளை நாட்டுவதற்கு நடவடிக்கை

இவ்வருடத்தில் ஒரு மில்லியன் மரக்கன்றுகளை நாட்டுவதற்கு நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

04 Nov, 2013 | 11:44 am


இந்த வருடம் ஒரு மில்லியன் மரக்கன்றுகளை நாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவிக்கின்றது.
இதற்காக அரச நிறுவனங்கள் பலவற்றின் ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஈ.எம்.யூ.டி. பஸ்நாயக்க தெரிவித்தார்.
இதன் ஊடாக மரக்கன்றுகளை நாட்டுவதன் முக்கியத்துவம் தொடர்பில் மக்களை தெளிவூட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாடசாலைகள், சிறைச்சாலைகள், பாதுகாப்பு பிரிவு, பொலிஸார், பிரதேச, மாகாண சபைகள் என அனைத்துடனும் இணைந்து தேசிய திட்டமாக இதனை முன்னெடுப்பதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
அத்துடன் எதிர்காலத்தில் சூழலை பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பிலும் இதனூடாக தெளிவூட்டப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஈ.எம்.யூ.டி. பஸ்நாயக்க மேலும் தெரிவித்தார்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்