இலங்கை மீனவர்களை விடுதலை செய்வதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் – கடற்றொழில் அமைச்சு

இலங்கை மீனவர்களை விடுதலை செய்வதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் – கடற்றொழில் அமைச்சு

இலங்கை மீனவர்களை விடுதலை செய்வதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் – கடற்றொழில் அமைச்சு

எழுத்தாளர் Staff Writer

04 Nov, 2013 | 11:13 am


கடற்றொழிலாளர்கள் பரிமாற்றத் திட்டத்தின் கீழ், இந்தியாவில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்வதற்கு துரித நடவடிக்கை எடுப்பதாக கடற்றொழில் அமைச்சு குறிப்பிடுகின்றது.
இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்ததன் பின்னர், இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிப்பது தொடர்பில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்படுமென கடற்றொழில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கைதுசெய்யாது, அவர்களின் படகுகளை மாத்திரம் கைப்பற்றுவதற்கு எதிர்வரும் காலங்களில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் கூறினார்.
இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் இலங்கைக்கு உரித்தான 200 கடல்மைல் தூரத்தை தாண்டி, சர்வதேச கடற்பரப்பிற்குள் சென்று, மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமென கடற்றொழிலாளர்களுக்கு தொடர்ந்தும் அறிவுறுத்தல் விடுத்து வருவதாக கடற்றொழில் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
 
இதேவேளை, கடற்றொழிலாளர்கள் இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதால் தாம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக அவர்களின் உறவினர்கள் குறிப்பிடுகின்றனர்.
எனவே, உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து அவர்களை விரைவில் விடுதலை செய்யுமாறும் உறவினர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதேவேளை, இலங்கை மீனவர்கள் 97 பேர் தற்போது இந்தியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு குறிப்பிடுகின்றது.
இவர்களில் 87 மீனவர்கள் தமிழகத்திலும், 10 மீனவர்கள் ஆந்திர பிரதேசத்திலும் கைதுசெய்யப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்