இலங்கை – இந்திய கடற்படையின் கூட்டு பயிற்சி இன்று ஆரம்பம்

இலங்கை – இந்திய கடற்படையின் கூட்டு பயிற்சி இன்று ஆரம்பம்

இலங்கை – இந்திய கடற்படையின் கூட்டு பயிற்சி இன்று ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

04 Nov, 2013 | 9:56 am


இலங்கை – இந்திய கடற்படையின் கூட்டு பயிற்சிகள் கோவாவை அண்மித்த கடற்பரப்பில் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளதாக கடற்படை குறிப்பிடுகின்றது.
இந்தப் பயிற்சிகளில் கலந்துகொள்ளும் நோக்கில், கடற்படையின் சமுத்திர கப்பல் இந்தியாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கொமான்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
இன்று ஆரம்பமாகும் இந்த பயிற்சி நடவடிக்கைகள் எதிர்வரும் 08 ஆம் திகதிவரை இடம்பெறும் என கடற்படை பேச்சாளர் கூறினார்.
இலங்கை – இந்திய கடற்படைகளுக்கு இடையில், வருடாந்தம் முன்னெடுக்கப்படும் இந்தப் கூட்டுப் பயிற்சிகள் கடந்த வருடம் திருகோணமலை கடற்பரப்பில் இடம்பெற்றதாகவும் கொமான்டர் கோசல வர்ணகுலசூரிய மேலும் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்