வெள்ளத்தில் மூழ்கியது எழுவாங்குளம்

வெள்ளத்தில் மூழ்கியது எழுவாங்குளம்

வெள்ளத்தில் மூழ்கியது எழுவாங்குளம்

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2013 | 6:41 pm


கடும் மழை காரணமாக புத்தளம் – மன்னார் வீதியின் எழுவாங்குளம் பகுதி மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
கலா வாவியின் நீர்மட்டம் அதிகரித்ததை அடுத்து இந்த வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது என புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
எனினும் இந்த வீதியுடனான போக்குவரத்துக்கு பெரிதளவில் பாதிப்பு ஏற்படவில்லை என இடர்  முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை புத்தளம் தப்போவ மற்றும் வண்ணாத்திவில்லு பகுதியில் நேற்று  வீசிய பலத்த காற்றினால் 19 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்