லிந்துலை, சேரம் தோட்டத்தில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய  03 சந்தேகநபர்கள் கைது

லிந்துலை, சேரம் தோட்டத்தில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய 03 சந்தேகநபர்கள் கைது

லிந்துலை, சேரம் தோட்டத்தில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய 03 சந்தேகநபர்கள் கைது

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2013 | 7:49 pm

லிந்துலை, பேரம் தோட்டம் – மஹாவலி வீ்டமைப்புத் திட்டப் பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும்  சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து,  சந்தேகநபர்கள் இன்று கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மதுபோதையில் இருந்த சிலருடன் ஏற்பட்ட தகராறை அடுத்து நேற்று மாலை கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கத்திக்குத்துக்கு இலக்கானவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நுவரெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்