மழை குறித்து எச்சரிக்கையுடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல்

மழை குறித்து எச்சரிக்கையுடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல்

மழை குறித்து எச்சரிக்கையுடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2013 | 10:44 pm


தற்போது நாட்டில், மாலை வேளைகளில் காணப்படும் இடியுடன் கூடிய மழை குறித்து எச்சரிக்கையுடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
பொதுமக்களின் கவனக்குறைவால் கூடுதலான மின்னல் தாக்கத்துக்குள்ளாகி ஆபத்துக்கள் அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ். ஆர் .ஜயசேகர தெரிவித்துள்ளார்.
மின்னல் தாக்கத்தினால் நேற்று மாலை இருவர் உயிரிழந்துள்ளனர்.
காலி. வந்துரப பிரதேசத்தில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகி 15 வயது பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு மாணவன் காயங்களுக்கு உள்ளாகியுள்ளான்.
பாடசாலை வளாகத்தில் காணப்பட்ட மாமரத்தில் மாங்காய்களை பறித்திக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
காயங்களுக்கு உள்ளான மாணவன் தற்போது கராபிடிய போதனா வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளார்.
காலி, போத்தல பிரதேசத்தில் நேற்று மாலை மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.
வீட்டுக்கு அருகிலுள்ள மாட்டு தொழுவத்திற்கு செல்லும் போது இவ்வாறு மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார்.
இந்த மின்னல் தாக்கத்தின் காரணமாக கன்று குட்டியொன்றும் உயிரிழந்துள்ளது.
இந்த நாட்களில் மின்னல் தாக்கம் ஏற்படுவது அதிகரித்துள்ளது. பாரிய மின்னல் தாக்கங்களெ காணப்படுகின்றது. ஆகவே இது குறித்து கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும். மாலையில் பெய்யும் மழையை கருத்திற்கொண்டு தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். பொதுவாக வருடத்திற்கு 50 பேர் வரையில் மின்னல் தாக்கத்தினால் உயிரிழக்கின்றனர்.இதில் பெரும்பாலானவை எமது கவனக் குறைவினாலேயே ஏற்படுகின்றது.
மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள முன்னெடுக்க வேண்டிய சில செயற்பாடுகள்…
1. வெளியில் நிற்கக் கூடாது
2. உயர்ந்த மரத்திற்குக் கீழ் நிற்க கூடாது.
3. இரும்புகளை பயன்படுத்தக் கூடாது.
4. தொலைபேசிகளை பயன்படுத்தக் கூடாது.
5. மின் உபகரணங்களை பயன்படுத்தக் கூடாது.
அதே, போன்று அதிக மழை காரணமாக புத்தளம் மன்னார் வீதியின் எழுவன் குளம் பிரதேசம் நேற்று மாலை நீரில் மூழ்கியது.
கலா ஓய பெருக்கெடுத்துள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதேபோன்று புத்தளம் அகுணவில பிரதேசத்தில் நேற்று மாலை ஏற்பட்ட கடும் காற்றினால் 19 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
தப்போவ, தேவனுவர, பிரதீபாகம மற்றும் மயிலன் குளம் ஆகிய பிரதேசங்களில் பெய்த கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக பத்திற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் பணிப்பாளர் எஸ்.ஆர்.ஜயசேகர – தெரிவித்த கருத்து
“தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காலநிலைதான் தற்போது காணப்படுகின்றது. மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வது இந்தப் பருவப் பெயர்ச்சியின் விசேட அம்சமாகும். இந்த இடியுடன் கூடிய மழையை உருவாக்கும் மேகங்கள் மிக உயர்வாக காணப்படக்கூடியவை.இந்த மேகத்திலிருந்து பூமியை நோக்கி வரும் காற்று மணித்தியாலத்திற்கு 80 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடியவை.இதனால் மரக் கிளைகள் முறிந்து விழக்கூடும். வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்படக்கூடும். அதேபோன்று ஆபத்துக்களும் ஏற்படலாம்”
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்