பிரான்ஸ் நாட்டு ஊடகவியலாளர்கள் இருவர் சடலங்களாக மீட்பு

பிரான்ஸ் நாட்டு ஊடகவியலாளர்கள் இருவர் சடலங்களாக மீட்பு

பிரான்ஸ் நாட்டு ஊடகவியலாளர்கள் இருவர் சடலங்களாக மீட்பு

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2013 | 4:06 pm

மாலியில் கடத்தப்பட்ட பிரான்ஸ் ஊடகவியலாளர்கள் இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
வானொலியில் கடமையாற்றும் ஊடகவியலாளர்கள் இருவர் நேற்று பிற்பகல் மாலியின் வடக்கு பகுதியில் வைத்து கடத்தப்பட்டுள்ளனர்.
உள்ளூர் அரசியல்வாதி ஒருவருடன்   நேர்காணலில் ஈடுபட்டு சில மணி நேரத்தின் பின்னர் இவர்கள் இருவரும் கடத்தப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் கடத்தப்பட்டு சிறிது நேரத்திற்குள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இந்த படுகொலையானது கொடூரமான செயல் என பிரான்ஸ் ஜனாதிபதி ப்ரன்சுவா ஹொலண்டே கண்டனம் வெளியிட்டுள்ளார்.
நைகரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரான்ஸ் பிரஜைகள் நாட்டிற்கு திரும்பியதை பிரான்ஸில் கொண்டாட்டங்கள் இடம்பெற்று 4 நாட்களிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்