தலிபான்களின் தலைவர் கொல்லப்பட்டதை அடுத்து பேச்சுவார்த்தைகளுக்கு பாதிப்பு

தலிபான்களின் தலைவர் கொல்லப்பட்டதை அடுத்து பேச்சுவார்த்தைகளுக்கு பாதிப்பு

தலிபான்களின் தலைவர் கொல்லப்பட்டதை அடுத்து பேச்சுவார்த்தைகளுக்கு பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2013 | 10:36 am

தலிபான் அமைப்பின் தலைவரை கொன்றதன் மூலம்  தலிபான்களுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு    அமெரிக்கா இடையூறு விளைவித்துள்ளதாக பாகிஸ்தான் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது பாகிஸ்தானின் சமாதான முயற்சிகளுக்கு விடுத்த மரண தண்டனை என பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தலிபான் அமைப்பினருக்கும் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதல்களில் பாகிஸ்தானின் தலிபான் தலைவர் ஹக்கீமுல்லா மெஹ்சூட் கொல்லப்பட்டதை தலிபான்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும் அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில் தமது நாடு  தோல்வியடையாது எனவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இதேவேளை  புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான உயர்மட்ட குழு நேற்று கூடியுள்ளது.
இதன்போது சஜ்னா எனும் உயர்மட்ட உறுப்பினர் ஒருவர் பாகிஸ்தான் தலிபான் அமைப்பின் தலைவராக தெரிவு செய்யப்ட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள போதுலும இதுவரையிலும் உறுதிப்படுத்தப்படவில்லை.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்