ஜோன் கெரி எகிப்திற்கு முன் அறிவிப்பு அற்ற விஜயம்

ஜோன் கெரி எகிப்திற்கு முன் அறிவிப்பு அற்ற விஜயம்

ஜோன் கெரி எகிப்திற்கு முன் அறிவிப்பு அற்ற விஜயம்

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2013 | 5:52 pm

அமெரிக்க இராஜங்கச் செயலாளர் ஜோன் கெரி எகிப்திற்கு முன் அறிவிப்பு அற்ற விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
மத்திய கிழக்கு, கிழக்கு ஐரேப்பா மற்றும் வடஆபிரிக்க நாடுகளுக்கான ஒன்பது நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் முதல் கட்டமாக ஜோன் கெரி கைய்ரோவைச் சென்றடைந்துள்ளார்.
கடந்த ஜுலை மாதம் பதவி கவிழக்கப்பட்ட மொஹமட் மூர்சிக்கு எதிரான வழக்கு விசாரணை நாளைய தினம் நடைபெறவுள்ள நிலையில், அவரின் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.
நாட்டின் அரசியல் அதிகார மாற்றம் மற்றும் பாதிக்கப்பட்டுள்ள இருதரப்பு உறவுகள் குறித்து இராணுவ பின்புலத்துடனான அரசாங்கத்துடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இதனிடையே மொஹமட் மூர்சியின் வழக்கு விசாரணைக்கும் ஜோன் கெரியின் விஜயத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மொஹமட் மூர்சி பதவி கவிழக்கப்பட்ட பின்னர் எகிப்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
முஸ்லீம் சகோதரத்துவ கட்சி மற்றும் அதன் ஆதரவாளர்களை அடக்கும் செயற்பாடுகளை இடைக்கால உள்விவகார அமைச்சு கட்டுப்படுத்த வேண்டுமென அமெரிக்க அடிக்கடி வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்