இலங்கை போக்குவரத்துச் சபைக்கு மேலும் 2000 பஸ்களை கொள்வனவு செய்ய தீர்மானம்

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு மேலும் 2000 பஸ்களை கொள்வனவு செய்ய தீர்மானம்

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு மேலும் 2000 பஸ்களை கொள்வனவு செய்ய தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2013 | 9:39 am

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு மேலும் 2000 பஸ்களை கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து இந்த பஸ்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் உப தலைவர் எல்.ஏ. விமலரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த பஸ்கள் தூர சேவைப் பயணங்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
தமது சபைக்குச் சொந்தமான 5 ஆயிரத்துக்கும் அதிகமான பஸ்கள் தற்போது சேவையில் ஈடுபட்டுவருவதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் உப தலைவர் எல்.ஏ. விமலரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்