அக்கரைப்பற்று களப்பில் மூழ்கி இருவர் பலி

அக்கரைப்பற்று களப்பில் மூழ்கி இருவர் பலி

அக்கரைப்பற்று களப்பில் மூழ்கி இருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

03 Nov, 2013 | 9:30 am

அக்கரைப்பற்றுப் பகுதியில்  களப்பு ஒன்றில்  மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
களப்புக்கு அருகில் மோட்டார் சைக்களில் பயணித்த சந்தர்ப்பத்தில் தலைக்கவசம்  களப்பில்  வீழந்தமையால், அதனை எடுக்க முற்பட்ட சந்தர்ப்பத்தில்  இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள்,  அக்கரைப்பற்று நாவக்குடா பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
21 மற்றும் 24 வயதான சகோதரர்களே நேற்று மாலை இடம்பெற்ற   இந்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்த அனர்த்தம் குறித்து அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்