Colombo (News 1st) ''உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்'' எனும் பாரதியின் வாக்கிற்கு வடிவம் தரும் தைப்பொங்கல் திருநாள் இன்றாகும்.சூரிய சக்தியின் பெருமையை பறைசாற்றி, உழவர்களை முன்னிலைப்படுத்தும் தைத்திருநாள் இன்று(14) பிறந்துள்ளது.உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை உலகவாழ் இந்துப்பெருமக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடுகின்றனர்.இயற்கை கொடைகளை இறைவனின் வரமாகப் போற்றிக்கொண்டாடும் மரபு தைப்பொங்கலின் சிறப்பம்சமாகும்.நன்றி உணர்வு, ஒற்றுமை, விருந்த...