.webp)

Colombo (News 1st) தேர்தல் ஆணைக்குழுவின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியலில் மேலும் 03 கட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன.
தமிழ் மக்கள் விடுதலை புலிகள், தமிழ் தேசிய பசுமை இயக்கம் மற்றும் எம் மக்கள் முன்னணி ஆகியன அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக பெயரிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 21ஆம் திகதி முதல் குறித்த அரசியல் கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
தற்போது தேர்தல் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 87 ஆகும்.
