3 பஸ்கள் மோதி ரம்பேவையில் விபத்து

5 உயிர்களை காவுகொண்ட ரம்பேவ பஸ் விபத்து

by Staff Writer 10-11-2026 | 12:10 PM

COLOMBO (News 1st) மிஹிந்தலை - ரம்பேவ பகுதியில் 03 பஸ்கள், மோதி இடம்பெற்ற விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எவ் யூ வூட்லர் தெரிவித்துள்ளார்.

விபத்தில் காயமடைந்தவர்கள் மதவாச்சி, வவுனியா மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 2 பஸ்களும் தனியார் பஸ்ஸொன்றும் மோதி இன்று (10) காலை விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் 2  பொலிஸ் குழுக்களினூடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.