ஜானகி சிறிவர்தன எதிர்வரும் 20 வரை விளக்கமறியலில்

கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன எதிர்வரும் 20 வரை தொடர்ந்தும் விளக்கமறியலில்

by Staff Writer 06-11-2026 | 4:07 PM

COLOMBO (News 1st) கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தனவை எதிர்வரும் 20ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (06) உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று  (06) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் கடந்த ஆம் திகதி நாமல் ராஜபக்ஸவிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட போதிலும், கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்தப்படும் எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் வழக்கு தொடர்பாக அவர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அடுத்த வழக்கு விசாரணை திகதியில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் இன்று  (06)  உத்தரவிடப்பட்டது.

ஜானகி சிறிவர்தன பணிப்பாளராகப் பணியாற்றிய கிரிஷ் நிறுவனத்திடமிருந்து சந்தேகநபரான நாமல் ராஜபக்ஸ 70 மில்லியன் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.