பேக்கரி பொருட்களின் விலை 5 ரூபாவினால் அதிகரிப்பு

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை 5 ரூபாவினால் அதிகரிப்பு

by Staff Writer 30-10-2026 | 5:45 PM

COLOMBO (News 1st) இன்று (30) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை 5 ரூபாவினால் அதிகரிப்பதற்கு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலை அண்மையில் 13 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (30) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

உலகலாவிய யுத்த நிலைமைக்கு மத்தியில் தற்போது பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிக்க  வேண்டும் என்ற கோரிக்கை, நிறைவேற்று சபை கூட்டத்தில் வலுபெற்றதையடுத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், வேறு எந்தவொரு அழுத்தங்களினாலும் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிக்கப்படவில்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.