.webp)

Colombo (News 1st) பெருமளவான டொலர்களை வௌிநாடுகளுக்கு அனுப்பியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஜெப்ரி மொஹமட் என்பவரின் பணத்தை பயன்படுத்தி, நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து இலங்கை சுங்கம் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளது.
புறக்கோட்டையிலுள்ள தங்க நகைக் கடை உரிமையாளர் ஒருவர் தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுங்கம் தெரிவித்துள்ளது.
அவர் 80 கிலோகிராமுக்கும் அதிகளவிலான தங்கத்தை இலங்கைக்கு கொண்டுவந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தற்போது குறித்த தங்கத்தைக் கண்டறிவதற்காக பல குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொருட்களை இறக்குமதி செய்யும் போர்வையில் வெளிநாடுகளுக்கு டொலர்களை அனுப்பிய 36 போலி நிறுவனங்களை நிறுவிய பாரியளவிலான கடத்தல்காரர் என கூறப்படும் ஜெப்ரி மொஹமட் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
