COLOMBO (News 1st)
பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் எரிவாயு கசிவு ஏற்பட்டதில் வைத்தியசாலை ஊழியர்கள் 07 பேர் காயமடைந்துள்ளனர்.இன்று (26) காலை 04.30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக, பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.