.webp)

Colombo (News 1st) முல்லைத்தீவு - மாங்குளம், பனிக்கன்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கி இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
70 வயதான தந்தையும் 59 வயதான தாயுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ.வூட்லர் தெரிவித்தார்.
பெற்றோரும் 43 வயதான மகளும் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத ஒருவரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக மாங்குளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் 02 பொலிஸ் குழுக்களின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ.வூட்லர் நியூஸ் ஃபெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.
