.webp)
-560291.jpg)
Colombo (News 1st) பழைய போகம்பர சிறைச்சாலையில் அடுத்த வாரத்திற்குள் கைதிகளை அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலையின் புனரமைப்புப் பணிகளில் 90 வீதத்திற்கும் அதிகமானவை நிறைவடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார தெரிவித்தார். போகம்பர சிறைச்சாலைக்கான கடமைகளில் அதிகாரிகளை ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், ஓய்வுபெற்ற அதிகாரிகளை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேலும் கூறினார்.
