கொண்ட ரஞ்சித் கைது

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான கொண்ட ரஞ்சித் கட்டுநாயக்கவில் கைது

by Staff Writer 09-09-2026 | 4:20 PM

COLOMBO (News 1st)

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான கொண்ட ரஞ்சித் என அழைக்கப்படும் ரஞ்சித் குமார கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொண்ட ரஞ்சித், துபாயில் இருந்து நாட்டிற்கு இன்று (09) அழைத்துவரப்பட்ட போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.