சமூக வலைத்தள பாவனைக்கு தடை விதிக்குமாறு கடிதம்

சிறார்களின் சமூக வலைத்தள பாவனைக்கு தடை விதிக்குமாறு பிரான்ஸ் ஜனாதிபதி வலியுறுத்தல்

by Staff Writer 09-09-2026 | 10:07 AM

Colombo (News 1st) ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்த 15 வயதிற்குட்பட்ட சிறார்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டுமென பிரான்ஸ் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.


ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் உர்சுலாவொன்டர் லயனுக்கு கடிதமூடாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரான் இதனை வலியுறுத்தியுள்ளார்.


சிறுவர்களின் மனநலம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ஐரோப்பிய நாடுகள் முழுவதும் ஒரே சீரான சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் பிரான்ஸ் ஜனாதிபதியினால் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 


பிரான்ஸில் 15 வயதிற்குட்பட்டோருக்கு சமூக வலைத்தள பயன்பாட்டிற்கான தடை விதித்து கொண்டுவரப்பட்ட சட்டம், அந்நாட்டின் அரசியலமைப்பு பேரவையால் கடந்த ஆகஸ்ட் மாதம் தடுத்து நிறுத்தப்பட்டது. 


வயதை சரிபார்ப்பதில் உள்ள சிக்கல்கள் மற்றும் தனிநபர் இரகசிய காப்புச் சட்ட மீறல்கள் என்பனவே அதற்கான காரணமாகும்.


பிரான்ஸில் சட்டம் தற்காலிகமாக தோல்வியடைந்ததை அடுத்து, மெக்ரான் இந்த விடயத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான சட்டமாக்க முயற்சித்து வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.