.webp)
-560078.jpg)
Colombo (News 1st) பெரும்போகத்தில் பருவ மழைக்கு முன்னர் 4 இலட்சம் ஏக்கரில் நெற்செய்கையை முன்னெடுப்பதற்கு நீர்ப்பாசனத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
தற்போது நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு சொந்தமான நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 34 % வரை வீழ்ச்சியடைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் பி.எஸ்.டீ. ஹேரத் தெரிவித்துள்ளார்.
சில மாவட்டங்களிலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு சுமார் 20 % காணப்படுகின்றது.
பெரும்போகத்தில் ஏனைய விளைநிலங்களில் பயிர்ச்செய்கையை முன்னெடுப்பதற்கு பருவ மழைக்கு பின்னர் நீரை விநியோகிக்க முடியும் என நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் பி.எஸ்.டீ. ஹேரத் தெரிவித்துள்ளார்.
