யுக்ரைன் போர் குறித்து இந்திய பிரதமர் கருத்து

யுக்ரைனுடனான போருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் - நரேந்திர மோடி

by Staff Writer 01-09-2026 | 8:17 AM

COLOMBO (News 1st) யுக்ரைனுடனான போருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமென இந்திய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். 

இந்தியா - ரஷ்யாவுக்கு இடையி​லான உறவு தனித்​து​வ​மானது எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

2 நாடுகளின் நட்​புறவு புதிய உச்​சத்தை எட்​டி​யுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். 

ஷங்காய் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டிருந்த போது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்த பின்னர் பிரதமர் மோடி இந்த கருத்துக்களை வௌியிட்டுள்ளார்.