.webp)
-559928.jpg)
COLOMBO (News 1st) ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணியின் தலைவரும் நட்சத்திர வீரருமான லியோனல் மெஸி சர்வதேச கால்பந்து அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
லியோனல் மெஸி தனது சமூக வலைத்தள பதிவின் மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் "இது ஒரு வேதனையான முடிவு என்றாலும் சரியான நேரம் வந்துவிட்டது" என்பதை புரிந்துகொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
மெஸி 207 சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாடி 125 கோல்களை பதிவு செய்துள்ளார்.
இதன் மூலம் ஆர்ஜெடீன அணிக்காக அதிக கோல்களை அடித்த வீரராகவும் அதிக போட்டிகளில் விளையாடிய வீரராகவும் அவர் திகழ்கின்றார்.
கட்டாரில் நடைபெற்ற 2022 FIFA உலகக்கிண்ணத்தை ஆர்ஜென்டினா கைப்பற்ற வழிநடத்திய அணித்தலைவராக லியோனல் மெஸி திகழ்கிறார்.
ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் Ballon d'Or விருதை அவர் 08 தடவைகள் வென்றுள்ளார்.
இந்த விருதை அதிக முறை வென்ற வீரராக அவர் வரலாற்றில் பதிவாகியுள்ளார்.
FIFA உலகக் கிண்ணக் கால்பந்தாட்ட வரலாற்றில் சிறந்த வீரருக்கு வழங்கப்படும் Golden Ball விருதை மெஸி 02 தடவைகள் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
