.webp)

Colombo (News 1st) நிக்கவரெட்டிய பகுதியில் அதிவலு கொண்ட மோட்டார் சைக்கிள்களுடன் 04 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிவேகத்துடன் பயணிக்கும் அதிவலு கொண்ட குறித்த மோட்டார் சைக்கிள்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர்களும் பொருத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 04 மோட்டார் சைக்கிள்களிலும் போலியான இலக்கத்தகடுகள் பொருத்தப்பட்டிருந்தமை கண்டறிப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
சம்பவம் தொடர்பில் 18, 19, 20 மற்றும் 22 வயதான இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிக்கவெரடிய பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
