டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

புதிய பாடசாலை தவணைக்கு முன்னர் நாடு முழுவதும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

by Staff Writer 31-08-2026 | 7:23 AM

Colombo (News 1st) புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. 


தென்மேற்கு பகுதிகளில் அவ்வப்போது பெய்யும் மழை காரணமாக மீண்டும் டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கக்கூடும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, தமது சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 


இதனிடையே, வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 95,174 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 72 டெங்கு மரணங்களும் இடம்பெற்றுள்ளன. 


இந்த மாதத்தின் கடந்த 30 நாட்களில் 9,838 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.