.webp)
-559906.jpg)
COLOMBO (News 1st) கொழும்பு துறைமுகத்தில் மீட்கப்பட்ட கொள்கலனிலிருந்து 443 கிலோகிராமிற்கும் அதிகளவிலான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
போதைப்பொருளை நிறுக்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெமட்டகொட பகுதியை சேர்ந்த 44 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீள் ஏற்றுமதி என்ற போர்வையில் பாகிஸ்தானிலிருந்து துவாய்கள் அடங்கிய கொள்கலன் என தெரிவித்து கடந்த ஜூன் மாதம் இந்த கொள்கலன் கொழும்பு துறைமுகத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாகிஸ்தானிலிருந்து நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட குறித்த கொள்கலனை மத்திய ஆப்பிரிக்க நாடான கெமரூனுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தமை இதுவரையான விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இலங்கை சுங்கம், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம், கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வு பணியகம் ஆகியன இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.
