.webp)
-559804.jpg)
Colombo (News 1st) கொழும்பு - கறுவாத்தோட்டம் பகுதியில் கார் பந்தயத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து காரொன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சில அதிசொகுசு கார்கள் குறித்த பகுதியில் அதிவேகமாக செலுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
26 வயதுடைய இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய 2 கார்களை பறிமுதல் செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
