.webp)

Colombo (News 1st) Facebook மற்றும் Instagram போன்ற சமூக வலைத்தளங்கள் சிறுவர்களுக்கு தீங்கு விளைவிப்பதாகத் தெரிவித்து தொடரப்பட்ட வழக்குகளில், 18 பில்லியன் அமெரிக்க டொலரை செலுத்த மெட்டா நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.
கலிபோர்னிய நீதிபதியின் உத்தரவிற்கமைய, மெட்டா நிறுவனம் 48 மாநிலங்களுக்கும் வொஷிங்டன் மாநிலம் மற்றும் அமெரிக்காவின் 03 பிராந்தியங்களுக்கும் இந்த தொகையை செலுத்தவுள்ளது.
சிறுவர் பாதுகாப்பு வழக்குகளில் இதுவரை மெட்டா நிறுவனம் செலுத்தும் மிகப்பெரிய இழப்பீட்டு தொகை இதுவாகும்.
இந்த தொகை 10 ஆண்டு காலப்பகுதிக்குள் வருடாந்த தவணைகளாக செலுத்தப்படவுள்ளது.
மேலும் சிறுவர்களை சமூக வலைத்தளங்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் அன்றாட நேர வரையறை மற்றும் இரவு நேர தடை போன்ற பல மாற்றங்களை மெட்டா நடைமுறைப்படுத்தவுள்ளது.
