பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு பிணை

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு பிணை

by Staff Writer 24-08-2026 | 1:29 PM

COLOMBO (News 1st) 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை பிணையில் விடுவிக்குமாறு ஊவா மாகாண மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டிற்கமைய பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

50,000 ரூபா பெறுமதியான ரொக்கப் பிணை மற்றும் 10,000,00 ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் பாராளுமன்ற உறுப்பினரை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் 2 அதிகாரிகளுக்கு வீதியை மறித்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு கடந்த மாதம் 28ஆம் திகதி 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சமிந்த விஜேசிறிக்கு மேலதிகமாக அவரது சாரதியான பந்துல ரத்நாயக்க என்பவருக்கும் ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளமை நீதிமன்றத்தில் தெரியவந்தது.

2019 பெப்ரவரி 10ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளொன்றில் பண்டாரவளை நகரில் 02 பொலிஸ் அதிகாரிகள் பயணித்த ஜீப் வண்டியை மறித்து அவர்களை தாக்கியமை மற்றும் கொலை மிரட்டல் விடுத்தமை தொடர்பில் சமிந்த விஜேசிறி உள்ளிட்ட 3 பேருக்கு எதிராக சட்ட மாஅதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.