மட்டக்களப்பில் தினமும் 4 மணி நேர நீர் விநியோக தடை

மட்டக்களப்பில் இன்று முதல் தினமும் 4 மணி நேர நீர் விநியோகத் தடை

by Staff Writer 22-08-2026 | 1:24 PM

Colombo (News 1st) மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக இன்று(22) முதல் தினமும் 4 மணித்தியாலங்கள் நீர் விநியோகத்தடையை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 


மட்டக்களப்பு - உன்னிச்சைகுளத்தின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளதால் குடிநீர் விநியோகத்தை தொடர்ந்து முன்னெடுப்பதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 


காலை 10 முதல் பிற்பகல் 02 மணி வரை நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக சபை அறிவித்துள்ளது. 


வறட்சி நிலைமை வழமைக்கு திரும்பும் வரை நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.