.webp)
-559343.jpg)
Colombo (News 1st) 2026 லோசான் டயமண்ட் லீக் மெய்வல்லுநர் போட்டியில் இன்று (22) அதிகாலை நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கையின் ருமேஷ் தரங்க முதலிடத்தை பெற்றுள்ளார்.
அவர் 88.14 மீட்டர் தூர திறமையை வெளிப்படுத்தினார்.
முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா 2ஆம் இடத்தையும் முன்னாள் உலக சாம்பியன் ஆண்ட்ரூசன் பீட்டர்ஸ் 3ஆம் இடத்தையும் பெற்றனர்.
ருமேஷ் கலந்துகொண்ட 3ஆவது டயமண்ட் லீக் போட்டி இதுவாகும்.
இதற்கு முன்னர் நடைபெற்ற ரோமா டயமண்ட் லீக் மெய்வல்லுநர் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் 92.62 மீட்டர் தூர திறமையை வெளிப்படுத்தி ருமேஷ் தரங்க முதலிடத்தை பெற்றார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தோஹா டயமண்ட் லீக் மெய்வல்லுநர் போட்டியிலும் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் முதலிடத்தை பெற்று ருமேஷ் வெற்றியீட்டினார்.
ருமேஷ் இம்முறை பொதுநலவாய விளையாட்டு விழாவின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் 89.75 மீட்டர் தூர திறமையை வெளிப்படுத்தி தங்கப் பதக்கத்தை வென்றார்.
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் சர்வதேச தரவரிசை பட்டியலில் ருமேஷ் தரங்க தற்போது 2ஆம் இடத்தில் உள்ளார்.
