.webp)
-559202.jpg)
Colombo (News 1st) பண்டாரகம - மஸ்வில, வெந்தேசிவத்த பகுதியில் பொலிஸ் விசேட அதிரடி படையினரால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் வீடொன்றிலிருந்து 18 கிலோகிராமுக்கும் அதிக ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் பெறுமதி 12 கோடி ரூபாவிற்கும் அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளது.
குடு சலிந்து தலைமையின் கீழ், இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை முன்னெடுத்து செல்லும், தற்போது துபாயில் தலைமறைவாகியுள்ள துபாய் ரவிஷ்கவின் வழிநடத்தலின் கீழ் செயற்படும் இளைஞரே குறித்த போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஸ்வில பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப் படை தெரிவித்துள்ளது.
