சட்டவிரோத சிகரெட்களுடன் சீன பிரஜைகள் கைது

சட்டவிரோத சிகரெட்களுடன் சீன பிரஜைகள் கைது

by Staff Writer 19-08-2026 | 5:50 PM

Colombo (News 1st) சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட வௌிநாட்டு சிகரெட்களுடன் சீன பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கொள்ளுப்பிட்டி, காலி வீதியில் நேற்றிரவு(18) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேகநபர்களிடமிருந்து 12,000 சிகரெட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 31 மற்றும் 34 வயதுகளையுடைய சீன பிரஜைகள் இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.