2ஆவது முனைய பணிகளை விரைவுபடுத்த இணக்கம்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் 2ஆவது முனையப் பணிகளை விரைவுபடுத்த ஜப்பான் இணக்கம்

by Staff Writer 17-08-2026 | 12:02 PM

Colombo (News 1st)  கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது பயணிகள் முனையத்தின் நிர்மாணப்பணிகளை விரைவுபடுத்த ஜப்பான் இணக்கம் தெரிவித்துள்ளது.


ஐய்கா நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழு துறைமுகங்கள், சிவில் விமான போக்குவரத்து மற்றும் வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்கவை மீண்டும் சந்தித்து இது தொடர்பான உறுதிப்பாட்டை பெற்றுள்ளது.


கட்டுநாயக்க விமான நிலையத்தின் 2ஆவது முனையத்தின் நிர்மாணப்பணிகளை எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கு முன்னர் ஆரம்பிக்க  தீர்மானிக்கப்பட்டுள்ளது.


கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்காக, ஜப்பான் அரசாங்கத்துடன் ஜனாதிபதி நடத்திய பேச்சுவார்த்தைகளின் பிரதிபலனாக இந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.


அதனைத் தொடர்ந்து, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சருடன் இலங்கையிலுள்ள ஜப்பான் தூதுவர் மற்றும் ஐய்கா நிறுவன பிரதிநிதிகள் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தனர்.


குறித்த திட்டத்திற்கு தேவையான மேலதிக கடன் வசதிகளை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, அதற்கான நடவடிக்கைகளும் தற்போது நிறைவடைந்துள்ளன.

ஏனைய செய்திகள்