.webp)
-559088.jpg)
Colombo (News 1st) இலவச பாடப்புத்தகங்கள் காணாமல் போனமை தொடர்பான விசாரணைகளுக்காக திணைக்கள விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி பிரதியமைச்சர், டொக்டர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.
குறித்த பாடப்புத்தகங்கள் போக்குவரத்திற்காக கையளிக்கப்பட்டதன் பின்னர், முதலாவது சந்தேகநபரால் அவை அலவ்வ பகுதியிலுள்ள இடமொன்றுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், அதன் உரிமையாளர் அவற்றை நாரம்மலவில் விற்பனை செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அங்கிருந்து வத்தளை பகுதிக்கு குறித்த பாடப்புத்தகங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த மே 24ஆம் திகதி கல்வி திணைக்களத்தினால் இந்த பாடப்புத்தகங்கள் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு விநியோகிப்பதற்காக கையளிக்கப்பட்டுள்ளது.
08 இலசத்திற்கும் அதிக பெறுமதியான தரம் ஒன்றின் மூன்றாம் தவணைக்கான தமிழ் மொழி செயல்நூல்கள் மற்றும் பாடப்புத்தகங்களே இவ்வாறு போக்குவரத்திற்காக கையளிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் கைது செய்யப்பட்ட 05 சந்தேகநபர்களும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
